Latest News

October 27, 2012

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்!- வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
by admin - 0

மத்திய வங்காள விரிகுடாவில்
தாழமுக்கம்
அதிகரித்துள்ளதாகவும் இந்த தாழமுக்கமானது நாளை தொடக்கம் நாட்டின்
காலநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும்
வளிமண்டளவியல் திணைக்களம்
தெரிவித்துள்ளது. இத்தாழமுக்கம் காரணமாக
சுழல்காற்று வீசக்கூடிய அபாயம்
காணப்படுவதாகவும் அவதானமாக இருக்க
வேண்டுமெனவும் வளிமண்டலவியல்
திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், நாட்டின் கிழக்கு ஆழ்கடல் பகுதியில்
மீன்பிடியில் ஈடுபட்டுள்ள மீனவர்களிடமும்
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை,
இன்று மாலை அல்லது இரவு வேளைகளில்
மத்திய மலைநாட்டின் சில பகுதிகளில்
இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என
திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
« PREV
NEXT »

No comments