Latest News

October 25, 2012

பிரிட்டன் வீசா விண்ணப்பத்துக்கு புதிய நடைமுறை! கொழும்பு தூதரகம் அறிவிப்பு
by admin - 0

கொழும்பில்
கையளிக்கப்படும் வீசா விண்ணப்பங்களை சென்னை பிரித்தானிய
பிரதி உயர்ஸ்தானிகராலயத்தில் உள்ள ஐக்கிய
இராச்சிய எல்லை முகவரகம் எதிர்வரும்
முதலாம் திகதி வியாழக்கிழமை முதல்
கையாளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வீசா விண்ணப்பங்களில்
அநேகமானவை 2008 ம்
ஆண்டிலிருந்து சென்னையிலேயே பரிசீலனை ச இலங்கையிலுள்ள பிரித்தானிய
உயர்ஸ்தானிகராலயத்தின்
வீசா பிரிவு ஒக்டோபர் 31ம் திகதியுடன்
மூடப்படும். விஸா விண்ணப்பங்களை முன்னர்
போலவே வீசா விண்ணப்ப
நிலையத்திலேயே ஒப்படைக்கலாம். 90 சதவீத
வீசா விண்ணப்பங்கள் 15 நாட்களுக்குள்
பரிசீலிக்கப்படும். கடவுச்சீட்டை இலங்கைக்கு வெளியே கொண்ட
இலங்கை அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய
கட்டணம் ஆயிரம் ரூபாவை வீசா விண்ணப்ப
நிலையத்தில் செலுத்த முடியும்.
வீசா விண்ணப்ப நிலைய நிர்வாக செலவாக 200
ரூபா அறவிடப்படும். மேலதிக விபரங்களுக்கு,
தொலைபேசியூடாக - 331 (டயலொக்
பாவனையாளர்களுக்கு) 0094 773908011
உடன் தொடர்புகொள்ளவும். அல்லது, Chennai.visaenquiry@fco.gov.uk
என்ற மின்னஞ்சல்
முகவரிக்கு மின்னஞ்சல்களை அனுப்பியோ, அல்லது www.vfs-uk-lk.com அல்லது
www.ukba.homeoffice.gov.uk, அல்லது
www.ukba.homeoffice.gov.uk/countries/
srilanka என்ற
இணையத்தளங்களினூடாகவோ தகவல்களைப்
பெற்றுக்கொள்ள முடியும்.
« PREV
NEXT »

No comments