இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் போஸ் மைதானத்தில் இன்று காலை ஒருவர் தீக்குளித்துள்ளார்.
தீக்குளித்தவர் ஓட்டோ சாரதி என்றும் அவரது பெயர் விஜயராஜ் எனவும் தெரியவந்துள்ளது.
இன்று காலை அவர் சேலம் பேருந்து நிலையத்தில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன், போர்க்குற்றவாளியான அவர் இந்தியாவிற்கு வரக்கூடாது என்றும் உரக்க கத்தினார்.அத்துடன் திடீர் என்று உடலில் தீ வைத்துக்கொண்டார்.
பொதுமக்களும், சேலம் நகரப் பொலிஸாரும் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் ஈழ ஆதரவாளரான விஜயராஜ், பெரியார் பற்றாளர். அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.
விஜயராஜ் தினம் டயரி எழுதும் பழக்கமுடையவர். வைகோ, சீமான், கொளத்தூர் மணி கலந்துகொள்ளும் கூட்டங்களில் பங்கேற்கும்போது, அங்கு ஏற்படும் உணர்வுகளை தனது டயரியில் பதிவு செய்து வந்துள்ளார். தீக்குளிப்புக்கு முன்பு அவர் தனது டயரியில் எழுதியிருப்பதாகக் கூறியதாவது,
இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்கள், டாங்கிகள், போர் விமானங்கள் என்பவற்றைக் கொடுத்து தமிழர்களுக்கு தொடர் துரோகம் இழைத்துள்ளது.
இந்திய மத்திய அரசும், சோனியா காந்தியும் இன்னும் திருந்தவில்லை. இனியாவது இவர்கள் திருந்த வேண்டும். என்னுடைய உயிர் ஆயுதத்தைப் பார்த்து தமிழர்கள் ராஜபக்ஷவை செருப்பால் அடிக்க வேண்டும். அதற்காகத்தான் இதை நான் செய்தேன்.
ராஜபக்ஷவை இந்தியாவிற்குள் விடக்கூடாது. இத்தனை வீரமரணத்திற்கும் பிறகும் ராஜபக்ஷவுக்கு இந்திய அரசு வரவேற்பு கொடுக்கிறது.
இதை பார்த்தாவது தமிழர்கள் ஒட்டுமொத்தமாக எழுச்சிப் பெற்று ராஜபக்ஷவை எதிர்க்க வேண்டும் என்றார் பலத்த தீக்காயங்களுடன் அவதிப்பட்டுக்கொண்டே...
மருத்துவர்கள் அவரை பேசக்கூடாது என்று கூறியும், நான் எனது உணர்வுகளை மீடியாக்கள் மூலம் தமிழகத்துக்கு தெரிவிக்கிறேன். என்னை பேசவிடுங்கள் என்றார்.
விஜயராஜ் குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது, 80 சதவீதத்திற்கு மேலாக தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சையில் இருக்கிறார். காப்பாற்ற முயற்சி செய்கிறோம் என்றனர்.
அவரது ஆட்டோவில் வைக்கப்பட்டுள்ள டயரியில் ராஜபக்ஷவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தகவல்களை எழுதியிருப்பதாக கூறியதை தொடர்ந்து அவரின் ஆடோவிலிருந்த டயரியை பொலிஸார் விசாரணைக்காக கைப்பற்றியுள்ளார்கள்.
இந்த தகவல் கிடைத்ததும், சேலம் நகரம் மட்டுமில்லாது மாவட்டத்தின் பல பகுதிகளிளுமிருந்து தமிழின உணர்வா ளர்கள் சேலம் மருத்துவமனைக்கு வந்தனர். இதை தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments
Post a Comment