Latest News

September 18, 2012

ராஜபக்சே வருகையைக் கண்டித்து சேலத்தில் தீக்குளித்த ஆட்டோ டிரைவர் மரணம்.
by admin - 0

சேலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜய்ராஜ் தமிழின உணர்வாளர். தமிழ் இயக்கங்கள் நடத்துகின்ற அனைத்து கூட்டங்களுக்கும் தவறாமல் சென்று கலந்து கொள்வார். இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு தமிழர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க வலியுறுத்தி நேற்று அதிகாலை தீக்குளித்தார்.

பின்னர் தீக்காயங்களுடன் அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் அவர் உயிரிழந்தார். தீக்குளித்த நிலையில் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய்ராஜ், மகிந்த ராஜபக்சேவை தமிழர்கள் செருப்பால் அடித்து விரட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

« PREV
NEXT »

No comments