Latest News

August 14, 2012

டிவிட்டரில் நுழைகிறார் கருணாநிதி
by admin - 1

திமுக தலைவர் கருணாநிதியும் சோசியல் மீடியாவுக்குள் நுழைந்துள்ளார். டிவிட்டரில் தனது கணக்கைத் துவக்கவுள்ளார். (https://twitter.com/kalaignar89)

பாஜக தலைவர் அத்வானி இப்போதெல்லாம் தனது பேஸ்புக் அக்கெளண்டில் தான் தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அதே போல குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் டிவிட்டர் பக்கம் மிக மிகப் பிரபலமானதாகும். அங்கு அவருக்கு 8 லட்சம் வாசகர்கள் உள்ளனர்.

இந் நிலையில் டிராமா, சினிமா, டிவி என அந்தந்த கால டெக்னாலஜிக்களை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட இயக்கம் திமுக. ஆனால், இன்டர்நெட்டில் திமுக அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை.

இப்போது தான் திமுக பொருளாளர் ஸ்டாலின் பேஸ்புக்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந் நிலையில் கருணாநிதியும் சமூக வலைத்தள உலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். டிவிட்டர் கணக்கு துவங்கியுள்ள கருணாநிதி இனி அதிலும் தனது கருத்துகளை வெளியிடவுள்ளார்.
« PREV
NEXT »

1 comment

திண்டுக்கல் தனபாலன் said...

சற்று முன் தான் அறிந்தேன்.... நன்றி...