முதியவரை எழுப்பி கத்தி முனையில் அச்சுறுத்திய
திருடர்கள் இங்கிருந்த நகை மற்றும்
பணம்என்பவற்றை திருடிச் சென்ற சம்பவம்
ஒன்று யாழ்.தீவகம் சரவணையில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது. குறித்த முதியவர் வீட்டில்
தனித்து வசித்து வந்துள்ளார். அயலவர்களின்
உதவியுடன் வசித்து வந்த
இவரது வீட்டிற்குநள்ளிரவு ஒரு மணியளவில்
வீட்டின் கதவினை உடைத்துக்
கொண்டு உள்ளே வந்த திருடர்கள் உறக்கத்தில் இருந்த
முதியவரை எழுப்பி அவரை கத்தி முனையில்
கொலை செய்யப் போவதாக மிரட்டி அங்கிருந்த
பெரும் தொகையான நகைமற்றும் பணம்
என்பவற்றை திருடிச் சென்றுள்ளனர்.இதன்
போது 50 ஆயிரம் ரூபா பணமும், அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும்
மோதிரம்என்பவற்றையும் அபகரித்துச்
சென்றுள்ளனர்.
No comments
Post a Comment