Latest News

August 24, 2012

மீண்டும் மீண்டும் தவறான கருத்துகளையே கூறுகிறார் கருணாநிதி; பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு
by admin - 0

எனது குற்றச்சாட்டுக்கு பதில்
அறிக்கை விடுவதாக நினைத்துக்
கொண்டு மீண்டும் மீண்டும்
பொய்யானதும்
முன்னுக்குப்பின் முரணானதுமான
விவரங்களையே கருணாநிதி வெளியிட்டுக் கொண்டிருப்பதாக, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். ஈழத்தில் போர் நடந்து கொண்டிருந்தபோது, அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் கொண்டு வர
மத்திய அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய தலைவரான கருணாநிதி, அதில் அடியோடு தவறினார் என்பது என்னுடைய குற்றச்சாட்டாகும். அதற்குரிய சரியான பதிலை வழங்காமல் மாறாக மீண்டும் மீண்டும் பொய்யானதும் முன்னுக்குப்பின் முரணானதுமான விவரங்களையே கலைஞர் வெளியிட்ட வண்ணம் உள்ளார். என நெடுமாறன் சுட்டிக்காட்டியுள்ளார். ஈழப்போர் நெருக்கடியான கட்டத்தை அடைந்த வேளையில் இவர் செய்த அப்பட்டமான துரோகத்தை மறைப்பதற்காக, முன்பு ஆட்சியில் இருந்த போது நடத்திய செம்மொழி மாநாடும் இப்போது டொசோ மாநாடும் கலைஞர் நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ள நெடுமாறன், இந்த இரு மாநாடுகளும் எள்முனை அளவும் உதவவில்லை என்பதை இனியாவது அவர் உணர்வது நல்லது எனக் கூறியுள்ளார்.
« PREV
NEXT »

No comments