Latest News

August 24, 2012

மாணவிகளுக்கு தொலைபேசி இலக்கம் எழுதிக் கொடுக்கும் சிங்கள இராணுவம்; புதுக்குடியிருப்பில் தொடரும் அவலம்
by admin - 0

மாலை நேர வகுப்பிற்குச்
சென்று வரும் மாணவியருக்கு கைத்தொலைபேசி இலக்கத்தை எழுதிக்
கொடுக்கும் சிங்கள இராணுவத்தினரின்
அடாவடி நடவடிக்கைகள் புதுக்குடியிருப்பு பகுதியில் அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு மற்றும் அதனை அண்டிய பிரதேச மாணவர்கள் மாலைநேர வகுப்பிற்கு செல்வதற்காக பேருந்தில் செல்கின்ற போது இவ்வாறு இராணுவத்தினர் கைத்தொலைபேசி இலக்கத்தை எழுதிக் கொடுக்கின்றனர். இலவசமாக செல்வதற்காக இராணுவ சீருடையில் பேருந்தில் ஏறும் இவர்கள் ஏற்கானவே பெண்களிடம் கொடுப்பதற்காக சிறு சிறு துண்டுகளில் தமது தொலைபேசி இலக்கங்களை எழுதி வைத்திருக்கின்றனர். பேருந்தில் பயணிக்கும் பெண்கள் மற்றும் மாணவியருக்கு அருகில் விரும்பி சென்று நிற்கும் இராணுவத்தினர் அவர்களிடம் வலிய பேச்சைத் தொடங்குவதாகவும் சில வேளைகளில் கை, கால்களினால் சுறண்டுவதாகவும் இறங்கும் போது தாங்கள் ஏற்கனவே எழுதிவைத்திருந்த கைத்தொலைபேசி இலக்கத்தை கொடுத்து விட்டு செல்வதாக
பயணிகள் முறைப்பாடு செய்து வருகின்றனர். இவ்வாறு அடாவடித் தனங்களில் ஈடுபடும் இராணுவத்தினர் தொடர்பாக யாரிடம் சென்று முறையிட முடியும் என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலப்பகுதியில் தாம் எந்தவிதமான பிரச்சனைகளுக் இல்லாமல் வாழ்ந்து வந்ததாகவும் எந்த இரவிலும் பெண்கள் தனியாக நடமாடக் கூடிய சூழ்நிலை நிலவியதாகவும் ஆனால் தற்போது தமது பிள்ளைகள் ஒரு இடத்திற்கு தனியாக செல்ல முடியாத நிலையில் தமது பிள்ளைகள் வாழ்ந்து வருவதாக பெற்றோர்கள் கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளனர். உரிமை போராட்டத்தை திட்டமிட்ட ரீதியில் அழித்த சிங்கள இராணுவம் எமது இனத்தின் கலை,காலாச்சாரங்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இளைய சமூகத்தினரிடம் தமது கலாச்சாரத்தை புகுத்துவதுவதனூடாக எதிர்காலத்தில் தமிழர்களுக்குரிய பாரம்பரியங்கள் இல்லாது அழிக்கப்பட்டு இலங்கை என்பது சிங்களவர்களுக்கே செந்தமானது என்ற
உரிமையினை நிலைநாட்டும் நோக்கத்தை கொண்டே அரசு இவ்வாறான செயற்பாடுகளை தமிழர் பிரதேசங்களில் திட்டமிட்ட ரீதியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அவர்கள் கொடுக்கும் போது தூக்கிஎறியுங்கள் அதுவே தற்பொழுது செய்யக்கூடிய செயல் அதைவிட்டு அவர்களுடன் உரையாட முயட்சிப்பது அவர்களை தூட்டுவதைபோலகும் சில பெண்கள் இப்படியான செயலில் இடுபடுவதை காணக்கூடியதாக உள்ளதாக ஆதங்கப்படுபவர்களின் கூற்று
« PREV
NEXT »

No comments