தாம்பரம் விமானப் படை தளத்தில்
பயிற்சி பெற்று வந்த 9 சிங்கள வீரர்களும்
அங்கிருந்து வெளியேற்றப்பட்டு இந்தியாவின்
வேறு ஒரு இடத்தில் பயிற்சி வழங்க மத்திய
பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சார்க் நாடுகளின் விமானப் படை வீரர்களுக்கு 9
மா தொழில்நுட்பட பயிற்சி சென்னை தாம்பரத்தில்
உள்ள விமானப் படை தளத்தில்
வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த
பயிற்சி தொடங்கியது. இதில் சிங்கள வீரர்கல் 9
பேரும் இடம்பெற்றிருந்தனர்.
இதற்கு தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா கடும்
எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி,
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட
அனைத்துக் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்புத்
தெரிவித்தனர். தாம்பரம் விமானப்
படை தளத்தை முற்றுகையிட்டு மதிமுக மற்றும்
நாம் தமிழர் கட்சி போராட்டமும் நடத்தின. மத்திய
அமைச்சர் வாசனும் இதற்கு எதிர்ப்புத்
தெரிவித்திருந்தார். இந்நிலையில் தாம்பரம் விமானப் படை தளத்தில்
பயிற்சி பெற்ற 9 சிங்கள வீரர்களையும்
வெளியேற்றவும் அவர்களுக்கு வேறு ஒரு இடத்தில்
பயிற்சி வழங்கவும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம்
இன்று உத்தரவிட்டுள்ளது.
No comments
Post a Comment