Latest News

July 06, 2012

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்
by admin - 0

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் குமரேசன். கூலி தொழிலாளி. இவரது மனைவி பானுப்பிரியா. இந்நிலையில் பானுப்பிரியா கர்ப்பமாகி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று காலை அவருக்கு பிரசவவலி ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு அருத்துவமனையில் பிரசவத்திற்காக கணவர் குமரேசன் சேர்த்தார். அதை தொடர்ந்து பானுப்பிரியாவுக்கு அடுத்தடுத்து சுகப்பிரசவத்தில்
வரிசையாக 4 குழந்தைகள் பிறந்தன. அதில் 2 ஆண் குழந்தை, 2 பெண் குழந்தை. இதில் ஆண் குழந்தைகள் முறையே 740 கிராம்,
610 கிராமும், பெண் குழந்தைகள் 540 கிராமும்,
590 கிராமும் இருந்தன. எடை குறைவாக பிறந்திருந்த காரணத்தினால்
குழந்தைகள் 4 பேரையும் டாக்டர்கள்
‘இன்குபேட்ட’ ரில் வைத்து தீவிரமாக
கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இறந்தன. இதனால் குமரேசன் மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து 740 கிராம் எடையுள்ள ஆண் குழந்தையை இன்குபேட்டரில் வைத்து டாக்டர் கண்காணித்து வருகின்றனர். இது குறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில், 3 அல்லது 4 குழந்தைகள் பெறுவது அரிதானதாகும். கடந்த வாரம் ஒரு பெண்ணுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. அதிலும் இரு குழந்தைகள் இறந்து போயின. நேற்று பிறந்த 4 குழந்தைகளில் 3 குழந்தைகள் இறந்து விட்டன.
« PREV
NEXT »

No comments