உள்ள பல லட்சக்கணக்கான
கம்பியூட்டர்களை தாக்கியுள்ள
வைரஸ்,
வரும்
திங்கட்கிழமை முதல்
தனது தூக்கத்தைக் கலைக்கலாம்
என
நம்பப்படுகிறது. டி.என்.எஸ் மாற்றி(DNS CHANGER) என்று அழைக்கப்படும் இந்த வைரஸ், கடந்த ஆண்டு முதலாக இன்ரர் நெட் ஊடகப் பரவ ஆரம்பித்தது. இந்த வைரஸ் பரவ ஆரம்பித்து பல மாதங்களின் பின்னர்தான் அமெரிக்க உளவுத்துறையான எவ்.பி.ஐ இதனைக் கண்டுபிடித்தது. இந்த வைரஸ் கம்பியூட்டரை தாக்கினால், நமது கம்பியூட்டரில் உடனடிப் பாதிப்பு எதுவும் நிகழ்வது இல்லை. இது வழமையான வைரஸ்சில் இருந்து மாறுபட்டவை. இந்த வைரஸ் உறக்க நிலையில் இருக்கும். இது விழித்துக் கொள்ளும் நாள் நெருங்கியது தனது வேலையைக் காட்டத் தொடங்கும். பொதுவாக நாம் எமது கம்பியூட்டரில் இருந்து கூகுள் பக்கத்துக்கோ, இல்லையேல் பேஃஸ் புக் பக்கத்துக்குச் செல்வதாக எடுத்துக்கொள்வோம். எமது கம்பியூட்டர், குறிப்பிட்ட இணையத்தின் டி.என்.எஸ் (Domain Name System ) அறிந்து அந்த தளத்துக்குச் செல்லும். இந்த
வைரஸ் ஆனது, அவ்வாறு செல்லவிடாது தானக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றி பேஃஸ் புக் செல்லவேண்டிய இடத்திற்கு மாறாக பிறிதொரு இணையத்துக்கு எமது கம்பியூட்டரை செலுத்தும்.
இதனூடாக நாம் செல்லவேண்டிய தளத்துக்குச் செல்லாமல், சற்றும் சம்பந்தமே இல்லாத தளத்துக்கு செல்லவேண்டி இருக்கும். இந்த வைரஸ் தாக்குதலை கண்டறிந்த அமெரிக்க உளவு நிறுவனம் (FBI), சில மாதங்களுக்கு முன்னரே அதனைச் செயலிழக்கச் செய்ய முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் பல லட்சக்கணக்கான மக்கள், பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் பொறுத்திருந்தார்கள்.
பலர் அன்ரி வைரஸ் மென்பொருளை பாவித்து தமது கம்பியூட்டரில் உள்ள வைரஸை நீக்கிவிட்டனர். இருப்பினும் பிரித்தானியாவில் மட்டும் சுமார் 30,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கம்பியூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் வரும் திங்கள் அன்று விழித்துக்கொள்ளும் என நம்பப்படுவதால், அன்றைய தினம் இன்ரர் நெட் வழங்குணர்கள் அனைவரும், இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான கம்பியூட்டர்களில் இருந்துவரும் சமிஞ்சைகளை, தடைசெய்யவுள்ளனர். இதனால் இன்ரர் நெட் இருந்தாலும், பலரது கம்பியூட்டர்கள் வேலைசெய்யாமல் போகலாம். இதில் இருந்து தப்பிக்கொள்ள இலகுவான பல வழிமுறைகள் இருக்கிறது. முதலில் உங்கள் கம்பியூட்டரில் அன்ரி வைரஸ் இருக்கிறதா எனப் பாருங்கள். அதில் திருப்த்தி இல்லை என்றால் கீள் காணும் இலவச அன்ரி வைரஸ் மென்பொருள்களில் ஏதாவது ஒன்றை (இலவசமாக) டவுன் லோட் செய்து, உங்கள் கணனியில் இன்ஸ்ரால் செய்யவும். அதன்பின்னர் இந்த டி.என்.எஸ் மாற்றி வைரஸை அது தானாகவே தேடிக்கண்டுபிடித்து அழித்துவிடும் !
முதலில் நீங்கள் இந்த முகவரிக்குச் செல்லுங்கள்: (http://www.dns-ok.us/) உங்கள் கணணி பாதிக்கப்பட்டுள்ளதா என இந்த அமெரிக்க தளம் காட்டிவிடும். பாதிக்கப்பட்டிருந்தால் கீள் காணும் முகவரிக்குச் சென்று இலவச அன்ரி வைரசை டவுன் லோட் செய்யலாம்: (http://download.cnet.com/ Avast-Free-
Antivirus/3000-2239_4-10019223.html?
part=dl-85737&subj=dl&tag=button)
No comments
Post a Comment