வடக்கில் உள்ள தமிழர்களுக்கு அரசு தொடர்ந்தும் பாகுபாடு காட்டுவதாக அமெரிக்கா குற்றஞ் சுமத்தியுள்ளது.
இந்நிலைமையினை மாற்றுவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமெரிக்க ஜனநாயக மனிதஉரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் மைக்கல் போஸ்னர் தெரிவித்துள்ளார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் அமெரிக்க மகிழ்ச்சி வெளியிட்டுள்ள அதேவேளை, ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.
உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தமிழ் மக்களின் அமைதியை நிலைநாட்ட இலங்கை அரசுக்கு பாரியதொரு பொறுப்பு தற்போதும் உள்ளது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
No comments
Post a Comment