அஜீத் ரசிகர்களால் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட பில்லா 2 ட்ரைலர் வெளியீட்டு விழா திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டது.
கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலக அரங்கில் இன்று மாலை நடைபெறுவதாக அறிக்கப்பட்ட இந்த விழாவில் அஜீத் கலந்து கொள்வாரா மாட்டாரா என்ற சந்தேகம் கடைசி வரை இருந்தது. இன்னொரு பக்கம் ரஜினி, கமல் ஆகிய பெருந்தலைகளும் விழாவுக்கு வருவதாகக் கூறிவந்தனர்.
இந்த நிகழ்ச்சிக்காக பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் விழா ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரோ, விநியோகஸ்தரான ஆஸ்கர் ரவிச்சந்திரனோ எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த நிகழ்ச்சியின் டிவி ஒளிபரப்பு உரிமை விஷயத்தில் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தருக்கும் உடன்பாடு ஏற்படாததுதான் நிகழ்ச்சி ரத்தானதற்கு காரணம் என்கிறார்கள்.
வரும் 13-ம் தேதி படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ள சூழலில், விளம்பரப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டிருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.
சினிமாவில் இதெல்லாம் சகஜம்தானே...
click here

No comments
Post a Comment