வணக்கம் வருக தமிழுக்கு முதல் இடம்
Headlines News :
விவசாயி இணையத்தை like(விருப்பம் ) செய்து விட்டு வெளியேறுங்கள் ...
Home » , » விவசாய பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் மிகுந்தன் தெரிவு

விவசாய பீடத்தின் பீடாதிபதியாக பேராசிரியர் மிகுந்தன் தெரிவு


29.06.2012 அன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் பேராசிரியர் மிகுந்தன் அவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாயபீட பீடாதிபதியாக ஒன்றரை வருடங்களுக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார் . இவர் யாழில் இருந்து வெளிவரும் பல தினப்பத்திரிகைகளில் விவசாயம் சார்ந்த பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு புரியும் படியாக தமிழ் உரைநடைகளில் எழுதி வருகிறார் .இதனால் யாழ் மற்றும் வடபகுதி விவசாய பெருமக்களுக்கு இவர் நன்கு பரிச்சியமனவரகவும் உள்ளார் .இவர் விவசாயத்தில் முதன்நிலை பட்டப்படிப்பை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்திலும் பயிர் பாதுகாப்பில் முதுநிலைமாணி பட்டப்படிப்பை பேராதனை பல்கலைக்கழக விவசாயத்திற்கான மேற்படிப்பு நிறுவனத்திலும் கலாநிதி பட்டத்தை பெங்களூரில் உள்ள வேளான் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். பேராசிரியர் அவர்கள் வானொலி ஊடாகவும் விவசாய தகவல்களை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது

Share this article :

0 உங்கள் கருத்துகள் இங்கே .........:

அதிகம் வாசிக்கப்பட்டவை

 
Support : Creating Website | vivasaayi | Mas Template
Proudly powered by vivasaayi
Copyright © 2011. விவசாயி-Tamil News - All Rights Reserved
Template Design by well come Published by vivasaayi