2011ம் ஆண்டுக்குட்பட்ட பட்டதாரி பயிலுநர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
வடமாகாணத்தைச் சேர்ந்த 2039 பட்டதாரி பயிலுநர்களுக்கு இம்முறை நியமனங்கள் வழங்க்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் 2004ஆம் ஆண்டு நியமனம் வழங்கப்பட்டிருந்தது.
இந் நியமனக் கடிதங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , மாநாகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் வழங்கி வைத்தனர்.
மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு இவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
வீரசிங்கம் மண்டபம் முழுவதையும் பட்டதாரிகளே நிரப்பியிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.
சம்பிரதாய பூர்வமாக நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து விட்டு, அதன் பின்னர் ஒவ்வொரு அமர்வுக்கும் உரியவர்கள் முன்வந்து திணைக்கள அதிகாரிகளிடம் தமது பெயர்களைக் கூறி நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இந் நிகழ்வானது ஒரு ஒழுங்கமைப்புக்கேற்ற முறையில் நடைபெறவில்லை. ஏனெனில் நியமனக்கடிதங்கள் உரியவர்களிடம் வழங்கப்படாது மாறி மாறி வழங்கப்பட்டன இதனால் பலர் குழப்ப நிலையிலேயே காணப்பட்டனர். அத்துடன் திணைக்கள அதிகாரிகளிடத்திலும் ஒரு குழப்பநிலை காணப்பட்டது.
இந் நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகாந்தன் மற்றும் திணைக்கள அதிகாரிகள், பட்டதாரிகள் எனப்பலர் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கலந்து கொள்ளவில்லை என்பதுடன் யாழ். மாவட்ட அரச அதிபர் நியமனக் கடிதங்களை வழங்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
இவற்றுக்கும் மேலாக இந் நிகழ்விற்கு அதிதிகளாக அழைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஈ.பி.டி.பி கட்சியைச் சேர்ந்தவர்களாவர். இதனைப் பார்க்கும் போது வடமாகாண தேர்தலுக்கு களம் அமைக்கும் மேடையாகவே பட்டதாரிகள் நியமனம் வழங்கும் நிகழ்வு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments
Post a Comment