Latest News

June 07, 2012

சிம்பு தனுஷ்! மீண்டும் சண்டை
by admin - 0



தமிழ்த் திரையுலகில் ஒரு நடிகர் நடித்த படத்தையோ அல்லது படத்தில் பேசிய வசனத்தையோ மற்ற நடிகர்கள் தங்கள் படத்தில் கலாய்ப்பது சாதாரணமான ஒன்று தான். ஆனால் சிம்புவிற்கும் தனுஷுக்கும் இடையே நடக்கும் சண்டைக்கு முடிவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

சிம்பு நடித்த காளை படத்தில் ’நான் பொல்லாதவன்’ என்று வில்லன் சொல்லும் போது ’நான் கெட்டவன்டா’ என்று சிம்பு சொல்லுவது போன்ற வசனம் இடம்பெற்றிருக்கும். சிம்பு நடித்து வெளியான வானம் படத்திலும் சந்தானமும் சிம்புவும் யாரிடம் கடன் கேட்பது என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது ’நம்ம தனுஷு...’ என்று சிம்பு சொல்ல, ‘அவன் உனக்கு செட் ஆகமாட்டான்...’ என்று சந்தானம் சொல்லுவார்.

சிம்புவும் தனுஷும் சமீபமாக சில பொது நிகழ்ச்சிகளில் சந்தித்துக் கொண்டபோது நன்றாக பேசி இருவரும் சேர்ந்து நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். ஆனால் தான் நடிக்கும் படங்களில் இதுபோன்ற வசனங்களை வைத்து தனுஷை வம்பிற்கு இழுப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார் சிலம்பரசன்.

தனுஷிடம் ‘நாம ஒருத்தர ஒருத்தர் திட்டி நடிச்சா தான் நம்ம வளர முடியும்’ என சிம்பு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு நேரடியாக இவ்வாறு கூறியிருந்தாலும் தனுஷ் தான் நடிக்கும் படங்களில் இது போன்ற முயற்சிகளை கையிலெடுப்பது இல்லை. இந்நிலையில் சிம்பு, ஹன்ஸிகா மோத்வானி, சந்தானம், கணேஷ் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் ’வாலு’ படத்தின் டிரெய்லர் இன்று(06.06.12) வெளியானது.

இந்த டிரெய்லரில் ஹன்ஸிகா மோத்வானி சிம்புவை பார்த்து “சில பசங்கள பாக்க பாக்க தான் புடிக்கும். உன்ன மாதிரி பசங்கள பாத உடனே புடிச்சிடும்” என்று சொல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தில் இடம்பெற்றுள்ள “ என்ன மாதிரி பசங்கள பாத்த உடனே புடிக்காது, பாக்க பாக்க தான் புடிக்கும்” என்ற வசனத்தின் ரிப்பீட்டு தான் வாலு படத்தில் வரும் வசனம்.

« PREV
NEXT »

No comments