Latest News

June 06, 2012

கொண்டலடி விநாயகர் ஆலயத்திலிருந்த2 வாகனங்கள் அதிகாலையில் திருட்டு
by admin - 0

யாழ்.வண்.வடகிழக்கு கொண்டலடி விநாயகர் தேவஸ்தானத்திலிருந்த (யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகாமையில்) மரத்திலான வாகன ங்கள் இரண்டு நேற்று அதிகாலை திருட்டுப் போயுள்ளதாக யாழ்ப்பா ணம் பொலிஸ் நிலையத்தில் முறை ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெறு மதியான இடபம், குதிரை வாகனங் களே இவ்வாறு திருடப்பட்டுள்ளன. அதிகாலை 2 மணியளவில் இந்தத் திருட்டுச் சம்பவம் இடம் பெற்றிருக் கலாம் என பொலிஸ் நிலையத்தில் தேவஸ்தானத்தின் பொருளாளர் செ. நகுலேஸ்வரன் செய்த முறைப்பாட் டில் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டை பதிவு செய்த யாழ்ப் பாணப் பொலிஸார் விசாரணை களை மேற்கொண்டு வருகின்றனர். குடாநாட்டில் இந்து ஆலயங்களை மையப்படுத்திய திருட்டுச் சம்பவங் கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின் றன. இவற்றை தடுத்துநிறுத்த வேண் டும் என இந்து சமய அமைப்புக்க ளும், புத்திஜீவிகளும், ஏனைய பொது அமைப்புக்களும் பொலிஸாரி டம் வேண்டுகோள் விடுத்துள்ளன. இருப்பினும் இந்து ஆலயங்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் திருட்டுச் சம்பவங்கள் அதிக ரித்துக் கொண்டே செல்கின்றன. இதனால் இந்து மக்களின் மனங்க ளில் விரக்தி ஏற்பட்டுள்ளது பல இல ட்சம் ரூபாய் பெறுமதியான ஆலயச் சொத்துக்கள் இவ்வாறு திருட்டுப் போவதனால் ஆலயங்களின் பொலி வும் மங்கிப்போகின்றது.

இராணுவம், மற்றும் பொலிஸ் வீதி க்கு வீதி சோதனைச்சாவடிகளில் காவலுக்கு அமர்த்தப்பட்டுள்ள போது ம் பாரியளவில் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் திருட்டுக்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. சுவாமியை வைத்து காவிச் செல் லும் மரத்திலான வாகனங்களை ஒரு வர் இருவரினால் திருடிச் செல்ல முடியுமா? எனவும். வீதிக்கு வீதி சோதனையில் ஈடுபடும் இராணுவத் தினருக்கும் பொலிஸாருக்கும் தெரி யாமல் கொண்டு செல்ல முடியுமா எனவும் பல பலதரப்பட்டவர்களி னாலும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

« PREV
NEXT »

No comments