தமிழ்நாட்டில் விவசாய தற்கொலைகள் நடப்பதில்லை’ என்று ஆட்சியாளர்கள் அடிக்கடி சொல்லி வருவதை கேட்டிருப்போம். ஆனால், அது உண்மை அல்ல என்று பல சம்பவங்கள் நிரூபித்துள்ளன. இப்போது கூட ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
நாகப்பட்டினம் மாவட்டம், மாபடுகை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகையன், கரும்பு சாகுபடி செய்து வந்திருக்கிறார்.
அண்மையில் ஊதிய உயர்வு கேட்டு சர்க்கரை ஆலை ஊழியர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக, போராட்டம் செய்துவந்தார்கள். இதனால், அறுவடை செய்ய வேண்டிய கரும்புகள் காய்ந்து வீணாகி போனது. கரும்பு அறுவடை செய்து கடனைக் கட்டலாம் என்று காத்திருந்த விவசாயிகள், மேலும், கடனாளியாக மாறினார்கள். அதில்ஓருவர் 60 வயதான முருகையன். சுமார் 5 லட்ச ரூபாய் கடன் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
தனது சட்டைப்பையில் தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர், கரும்பு அலுவலர் ஆகியோருக்கு தற்கொலைக்கான காரணத்தை கடிதமாக எழுதியும் வைத்திருக்கிறார்.
வெளியில் தெரிந்திருப்பது ஒரு முருகையனின் தற்கொலை. வெளிச்சத்துக்கு வராமலே பல முருகையன்களின் கதை முடிந்து விடுகிறது.
டெல்லியில் உள்ள திட்ட கமிஷன் அலுவலகத்தில் 2 கழிப்பறைகளை ரூ.35 லட்சம் செலவில் சீரமைத்துள்ளனர்.
இவர்கள் கழிப்பறைக் கட்டிய பணத்தில் 7 விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுத்திருக்க முடியும்.
விவசாயிகளைப் பற்றி கவலைப் பட நாட்டை ஆளும் பொருளாதார புலிகளுக்கு ஏது நேரம்?

No comments
Post a Comment