
ஆப்பிரிக்காவின் செனகல் நாட்டிலிருக்கும் ரிட்பா ஏரி... அடிக்கடி நிறம் மாறுவதன் மூலம் அனைவரையும் கவர்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஏரியின் தண்ணீர் பிங்க், ஸ்ட்ராபெர்ரி மற்றும் சிவப்பு என்று ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு நிறத்துக்கு மாறிவிடும்.
இது, தாறுமாறான கெமிக்கல் கழிவுகள் இந்த ஏரியில் கலப்பதால் நிகழும் கொடுமையல்ல. இயற்கையிலேயே நடக்கும் மேஜிக் அற்புதம்!
ஆம், இந்த ஏரி நீரில் வசிக்கும் 'டுனலியெல்லா சலினா' (Dunaliella Salina ) என்றழைக்கப்படும் உப்பை விரும்பும் நுண்ணுயிர் பாசிகள்தான் (salt-loving green micro alga ). இந்த நிறமாற்றத்துக்குக் காரணம்.
இந்த ஏரியில் அதிக அளவில் உப்பும் நிறைந்திருப்பதால், உப்பு எடுக்கும் தொழிலும் இங்கே நடத்தப்படுகிறது!
No comments
Post a Comment