Latest News

April 30, 2012

பிரபாகரன் பிறந்த ஊருக்கு உதவிய நடிகை ஏஞ்சலினா ஜோலி
by admin - 0


ஐ.நா அகதிகள் மறுவாழ்வு நிறுவனத்தின் சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் பிரபல கொலிவூட் நடிகை ஏஞ்சலினா ஜோலி. இவர் கடந்த பத்து ஆண்டுகளாக உலகின் பல பாகங்களுக்கும் சென்று அகதிகளுக்கு உதவியதற்காக இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளது. தனது உலகப் பயணங்களின் போது மறந்துவிடாமல் பிரபாகரன் பிறந்த ஊருக்கும் போய் நேரடியாக உதவியுள்ளார். சுனாமி வந்தபோது இலங்கை சென்றதும் அவர் முதலில் மரியாதை கொடுத்தது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த ஊருக்குத்தான். போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட வல்வெட்டித்துறை அரசினர் ஆதார வைத்தியசாலை சென்று ஒரு மில்லியன் ரூபாவை வழங்கினார். இன்று வடமாகாணத்தின் சிறந்த ஆரோக்கியமான வைத்தியசாலைகளில் முதன்மையாக இருப்பது வல்வை வைத்தியசாலையே. அந்த வைத்தியசாலையின் வாசலில் நடிகை ஏஞ்சலினா ஜோலி எடுத்துக் கொண்ட புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. இப்போது ஐ.நா அகதிகளுக்கான சிறப்புத் தூதுவர் பதவியை ஏஞ்சலினா ஜோலிக்கு வழங்கியிருப்பது ஈழத் தமிழ் மக்களுக்கும் மகிழ்வான விடயமே. பிரபாகரன் பிறந்த வீட்டை இடிக்கும் சிங்கள இனவாத அரசு மக்கள் மனங்களில் அவர் பிடித்துள்ள இடத்தை இடிக்க முடியாமல் தவிப்பதற்கு ஏஞ்சலினா ஜோலியும் ஓர் உதாரணமாகும்.



« PREV
NEXT »

No comments