Latest News

April 30, 2012

மரக்கறிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அரசு முடிவு
by admin - 0


நாட்டில் தற்போது மித மிஞ்சிய அரிசி மற்றும் மரக்கறிகள் உற்பத்தி செய்யப் படுகின்றன. இதனால் அவற்றைச் சந்தைப்படுத்த முடியாமல் விவசாயிகள் நஷ்ட மடைந்து வருகிறார்கள்.

எனவே அவர்களுக்கு கூடுதல் வருமானத்தைப் பெற்று கொடுக்கும் வகையில் அரிசி, மரக்கறி வகைகளை ஏற்றுமதி செய்வதற்கான நட வடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று பொருளாதார அருவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

அரசின் விவசாய அபிவிருத்தித் திட்டங்களின் விளைவாலேயே அதிகளவான விளைச்சலை விவசாயிகள் பெற்றுள்ளனர். எனினும் விளைச்சலுக்குரிய பயனை அவர்கள் பெறமுடியாதுள்ளனர். உள்ளூர்ச் சந்தைகளை விடவும் ஏற்றுமதி மூலம் விவசாயிகள் பயன்பெற முடியும்.

மேலதிகமாகவுள்ள உணவுப் பொருள்களை பதப்படுத்தும் திட்டம் மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளுக்கு அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கவுள்ளது. பொதுமக்களால் வீட்டுத் தோட்டங்களில் மேற் கொள்ளப்படும் பயிர்ச்செய்கை காரணமாகவே அளவுக்கதிகமான உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்றார்.

« PREV
NEXT »

No comments