தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது போராளிகளுக்கு எப்போதும்
சாவு இல்லை என்று அவர் பதிலளித்தார். மேலும் புலிகள் மீண்டும் போராட்டம் நடத்தினால்டெசோ அமைப்பு அதை ஆதரிக்குமா என்று கேட்டதற்கு, புலிகள் மீண்டும் வந்து போராட்டம் நடத்தினால் அறப்போராட்டம் நடத்துங்கள் என்றுதான் அழைப்பு விடுப்போம் என்று அவர் கூறினார். போராடுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய உள்ளம் தூய்மையாக இருந்தால்
அந்த போர்க்குணம் என்றைக்கும் மாறாமல் இருக்குமானால் எந்த லட்சியத்துக்காக குறிக்கோளுக்காக போராடுகிறார்களோ அவர்கள் அதிலே மாறாமல் இருப்பார்களேயானால் அந்த போராளிகளிடத்தில் எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு என்று கருணாநிதி மேலும் தெரிவித்தார்.
No comments
Post a Comment