Latest News

April 12, 2012

யாழில் இரு நாட்களில் மூன்று இளம் பெண்களின் சடலம் மீட்பு! மக்கள் மத்தியில் அதிர்ச்சி !
by admin - 0


யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் இளம் பெண்களின் மரணங்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இன்று வியாழக்கிழமை (12) யாழ்.மானிப்பாய் பகுதியிலுள்ள வயல்கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலத்தை மானிப்பாய் பொலிஸார் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

ஆனந்தா வீதி பெரியபுலம் மானிப்பாயைச் சேந்த 20 வயதான லதாரூபன் சாளினி என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவரது மரணத்திற்கு காதல் விவகாரம் என அயலவர்களினால் தெரிவிக்கப்படுகின்றபோதும் அதன் உண்மை நிலமை தெரியவரவில்லை.

சம்பவ இடத்திற்கு சென்ற மல்லாகம் நீதிவான் சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு மானிப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை யாழ். அச்சேழுப் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவருடைய சடலத்தை கோப்பாய் பொலிஸார் நேற்றுப் புதன்கிழமை மாலை 5 மணியளில் கண்டுபிடித்துள்ளனர்.

கே.தங்கமணி (வயது 23) என்ற இளம்பெண்ணே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் மனநிலை பாதிக்கப்பட்டு வீடு ஒன்றில் தங்கவைக்கப்பட்டு இருந்த நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதை அடுத்து உறவினர்கள் கோப்பாய் பொலிஸாருக்கு தகவலை கொடுத்ததை அடுத்து சடலம் கோப்பாய் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இத்தோடு யாழ்.இணுவில் பகுதியில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இருநாட்களில் மூன்று இளம் பெண்பிள்ளைகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது யாழ். சமூகத்தில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது உளநல ஆலோசனைகள் பாடசாலை மட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆவலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.


« PREV
NEXT »

No comments