Latest News

April 12, 2012

தென்கொரியத் தலைநகர் சியோலுக்கு மேலால் பறந்த பறக்கும் தட்டால் பரபரப்பு! அதிர்ச்சிக் காணொளி இணைப்பு
by admin - 0

UFO எனப்படும் பறக்கும் தட்டு விவகாரம் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பறந்து கொண்டிருந்த ஜெட் விமானத்திலிருந்து சில செக்கன்கள் எடுக்கப்பட்ட வீடியோவே மேற்படி சர்ச்சைகளுக்கு காரணமாகும்.

இந்த வீடியோவானது தென்கொரியத் தலைநகரான சியோலுக்கு மேலால் பறந்து கொண்டிருந்த ஜெட் விமானத்தில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் வேற்றுக் கிரக வாசிகள் பூமியை நோட்டம் விட வந்துள்ளனரா என்ற சந்தேகம் வானியல் அறிஞர்களிடையே எழுந்துள்ளது.

விமானத்தில் இருந்த சுற்றுலாப் பயணி ஒருவரால் எடுக்கப்பட்ட மேற்படி வீடியோ கடந்த சனிக்கிழமை அன்று Youtube இல் தரவேற்றப்பட்டுள்ளது.

குறித்த வீடியோவை ஏராளமானோர் பார்த்து இரசித்துள்ளனர்.

« PREV
NEXT »

No comments