தெலுங்கில் உருவாகி வரும் தம்மு படத்தில் த்ரிஷா, இதுவரை இல்லாத அளவுக்கு ரொம்ப கவர்ச்சியாக நடித்திருக்கிறாராம். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த த்ரிஷாவுக்கு இப்போது புதுமுக நடிகைகளின் வரவால் கொஞ்சம் சறுக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
இப்போது தமிழில் விஷாலுடன் சமரன் படத்திலும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் தம்மு என்ற படத்திலும் நடித்து வருகிறார். கவர்ச்சியை பொறுத்தவரை நடிகை த்ரிஷா தனக்கு என்று ஒரு லிமிட் வைத்திருக்கிறார்.
இந்நிலையில் தம்மு படத்தில் த்ரிஷா, ஜூனியர் என்.டி.ஆர்., உடன் ரொம்பவே நெருக்கமாக, கவர்ச்சி காட்டி நடித்து இருக்கிறாராம். த்ரிஷா இதுவரை நடித்த படங்களை காட்டிலும், இந்தப்படத்தில் தான் அதிக கவர்ச்சி காட்டி நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே த்ரிஷா விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் தீன்மார் படங்களில் துணிச்சலாக முத்தக்காட்சியில் நடித்து இருந்தார். ஆனால் இப்போது தம்முவில் அதையெல்லாம் தாண்டி ஒருபடி மேலே போய் கவர்ச்சி காட்சியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபகாலமாக சினிமாவில் த்ரிஷாவுக்கு வாய்ப்பு குறைந்து வருவதாகவும், தன்னுடைய மார்க்கெட்டை தக்க வைத்து கொள்ள தம்மு படத்தில் அதிகப்படியான கவர்ச்சி காட்டியிருப்பதாகவும் கிசுகிசுக்கிறது தெலுங்கு பட உலகம்.
உடனடிப்பணம் உங்களுக்கு தேவையா இங்கே
No comments
Post a Comment