அரியவகை புலியின் உடற்பாகங்களை விற்பனை செய்துவந்த ஒருவர் வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவினர் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
ஒன்பதரை அடி நீலமுடைய அரிய வகை புலியை கொன்று அதன் தோல், உறுப்புகள் உள்ளிட்ட இறைச்சியை சந்தேகநபர் விற்பனை செய்து வந்துள்ளார்.
இது குறித்து பொது மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலியின் பல் ஒன்றை 6000 ரூபாவிற்கு குறித்த நபர் விற்பனை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் விசாரணைகளின் பின் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக வவுனியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
No comments
Post a Comment