Latest News

March 06, 2012

தற்கொலை செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்ட விவசாயி
by admin - 0

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா தெற்குவலசு பாளையம், எல்லக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல். விவசாயி. இவர் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு விஷப்பாட்டிலுடன் மனு கொடுக்க வந்தார்.


இதனை பார்த்த போலீசார் கதிர்வேலிடம் இருந்த விஷ பாட்டிலை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். பின்னர் கலெக்டரிடம் விவசாயி கதிர்வேல் கொடுக்க அனுமதிக்கப்பட்டார்.

அவர் மனுவில், ‘’கடந்த உள்ளாட்சி தேர்தலில் நான் தற்போதையை ஊராட்சி தலைவருக்கு எதிராக பிரச்சாரம் செய்தேன்.

அதனை மனதில் வைத்து கொண்டு ஊராட்சி தலைவர் எனது வீட்டு அருகே பொதுக்குழாயில் வரும் குடிநீரை நிறுத்தி உள்ளார்.

இது பற்றி நான் தலைவரிடம் கேட்டேன். அதற்கு அவர், குடிநீர் குழாயில் கழிவு நீர் கலப்பதால்தான் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறினார்.

அவர் கூறியதில் உண்மை இல்லை. வேண்டும் என்றே குடிநீர் சப்ளையை துண்டித்து உள்ளார். தற்போது குடிநீர் நிறுத்தப்பட்டு உள்ளதால் கால்நடைகளுக்கு கூட தண்ணீர் வைக்க முடியாமல் நான் கஷ்டப்பட்டு வருகிறேன்.


இதுபற்றி கடந்த ஜனவரி மாதம் கலெக்டர் அலுவலகம் வந்து புகார் கொடுத்தேன். ஆனால் இன்று வரை அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் எனது கால்நடைகளுடன் நான் தற்கொலை செய்ய அனுமதி தரவேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
« PREV
NEXT »

No comments