சங்கரன்கோவில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு சென்றதாக சந்தேகப்படும், தமிழக அரசின் இலவச வேட்டி, சேலைகள், அத்தொகுதிக்கு உட்பட்ட இலந்தைகுளம் சோதனைச்சாவடியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய இந்த சோதனையில் 165 வேட்டிகளும், 88 புடவைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 பேரிடம் தேவர் குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இடைத்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி, நடத்தப்பட்டு வரும் சோதனையில் இதுவரை சுமார் 35 லட்சம் ரூபாய் பணமும், 8 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமீறல் தொடர்பாக 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
No comments
Post a Comment