Latest News

March 08, 2012

டைட்டானிக்கப்பல் மூழ்கியதற்கு சந்திரனின் அதிக ஒளிவீச்சே காரணம்
by admin - 0

இங்கிலாந்தின் சவுத் ஆம்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்ற டைட்டானிக் என்ற பயணிகள் சொகுசு கப்பல் கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் திகதி கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் ராட்சத பனிப்பாறையில் மோதி தண்ணீரில் மூழ்கியதில், அக்கப்பலில் பயணம் செய்த சுமார் 1500 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். அக்கப்பல் கடலில் மூழ்கி தற்பொழுது 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அதன் சோக சுவடுகள் இன்னும் மறையவில்லை.எனவே டைட்டானிக் கப்பல் மூழ்கியது குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கு சந்திரனின் அதிக ஒளி வீச்சே காரணம் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

டைட்டானிக் கப்பல் குறித்து டெக்சாஸ் பல்கலைகழகத்தின் சர்வதேச நிபுணர்கள் குழு ஆய்வொன்றை மேற்கொண்டனர். ஆய்வின் முடிவு குறித்து நிபுணர்கள் கூறுகையில், 1400 ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்திரன் பூமிக்கு மிக அருகில் வரும். அப்போது மிக அதிகமான ஒளி வீசும். அதனால் கடல்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி நீர்மட்டம் அதிகரிக்கும்.

அவ்வாறு வீசிய ஒளியின் காரணமாக தான் அட்லாண்டிக் கடலின் பனிப்பாறைகள் அதிக அளவில் உருகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அளவுக்கு மீறிய வெள்ளம் உடைந்த கப்பலுக்கு புகுந்து, கப்பல் மூழ்க காரணமாக இருந்துள்ளது என தெரிவித்தனர்.



« PREV
NEXT »

No comments