நேரம் ஆக... ஆக... 4 பேரின் ஆட்டமும் அதிகமானது. ரெயில் மாம்பலத்தில் நின்றது. அப்போது அங்கு இறங்கிய பெண்கள், ரெயில் பெட்டியில் “கொலவெறி” ஆட்டம் போட்டவர்களைப் பற்றி ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜனிடம் புகார் செய்தனர்.
இதையடுத்து, போலீசார் அடுத்த பெட்டியில் ஏறிக் கொண்டனர். சைதாப்பேட்டையில் ரெயில் நின்றதும் முதல் வகுப்பு பெட்டிக்கு சென்ற போலீசார் கொல வெறி பாடல் கும்பலை சுற்றி வளைத்தனர்.
விசாரணையில் அவர்கள் செங்குன்றம் கணேசன் (44), நாகப்பட்டினம் பாஸ்கரன் (42), சைதாப்பேட்டையை சேர்ந்த பாபு (42), சேஷப்பா (47) என்பது தெரிய வந்தது. கூலித் தொழிலாளர்களான 4 பேரும் நேற்று வேலை கிடைக்காததால் இருந்த பணத்துக்கு குடித்து விட்டு பரங்கிமலையில் இருக்கும் நண்பரை பார்க்க ரெயிலில் ஏறியுள்ளனர். 2-வது வகுப்பு டிக்கெட் எடுத்த அவர்கள் பெண்களை கண்டதும் முதல் வகுப்பில் ஏறி, பாட்டுப்பாடி கலாட்டா செய்து இருக்கிறார்கள்.
அது பற்றி பெண்கள் போலீசில் புகார் செய்ததால் நிலமை தலை கீழாகிவிட்டது. பெண்கள் யாரும் தனிப்பட்ட முறையில் 4 பேர் மீதும் புகார் கொடுக்க வில்லை என்றாலும், 2-வது வகுப்பு டிக்கெட் எடுத்து விட்டு முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தது பொது மக்களுக்கு இடையூறு செய்தது ஆகியவை குற்றச்சாட்டாக எடுத்துக் கொள்ளப்பட்டு ரெயில்வே விதிப்படி 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர் அனைவரும் எழும்பூர் சிறப்பு ரெயில்வே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி அங்காளேஸ்வரி, குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் 14 நாள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு வறினார்.
இதையடுத்து அவர்கள் நேற்று இரவு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
No comments
Post a Comment