Latest News

February 13, 2012

நடிகை பாவனாவின் காதல்
by admin - 0


செலிபி‌ரிட்டி கி‌ரிக்கெட் லீக் என்ற பெய‌ரில் இந்தியாவின் நட்சத்திரங்கள் கி‌ரிக்கெட்டை பதம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மைதானத்தில் நடக்கும் இந்த விளையாட்டைவிட கேல‌ரியில் நடக்கும் கோல்மால் ரொம்பவே சுவாரஸியம். கேரள நடிகர்களின் டீமை உற்சாகப்படுத்த பாவனாவை நியமித்திருக்கிறார்கள். மைதானத்துக்கு வந்தால் இவர் உற்சாகப்படுத்துகிறாரோ இல்லையோ, இவர் உற்சாகமாகிவிடுகிறார்.
காரணம் நடிகர் ரா‌‌ஜீவ் பிள்ளை. இந்த ஆறடி ஆணழகனைக் கண்டால் பாவனாவின் முகம் பல்ப் போட்டுவிடுகிறது என்று கேரள மீடியாக்கள் ச‌ரியாக கல்வீச, ஐயோ…
அது காதலேயில்லை, சும்மா பேசினாலே காதலா என்றெல்லாம் பாவனா பம்மிப் பார்க்கிறார். ஆனால் இது நிஜக்காதல்தான் என்று மீடியாக்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது. சில வேளை டைம்பாஸாகவும் இருக்கலாமில்லையா.



« PREV
NEXT »

No comments