தனது சாதாரண தமிழ் பேச்சால் சினேகாவின் மனதைக் கவர்ந்த பிரசன்னா தங்கள் காதலுக்கு மிக முக்கிய காரணமாக விளங்கியது இளையராஜா தான் என்று கூறியுள்ளார். சினேகா- பிரசன்னா திருமணம் செய்து கொள்ளப் போவது எல்லோரும் அறிந்தது.
திருமணத்திற்கு தயாராகி வரும் நடிகர் பிரசன்னா கூறியதாவது ”அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் மூலம் தான் சினேகாவுடைய அறிமுகம் கிடைத்தது. அப்படத்திற்கான ஷூட்டிங் அமெரிக்காவில் நடந்தது. ஆரம்பத்தில் எனக்கும், சினேகாவுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததால் இருவரும் முறைத்துக் கொண்டே இருப்போம்.
ஒரு நாள் ஷூட்டிங் பிரேக் டைமில் நான் வாக்மேனில் இளையராஜா சார் பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தேன். சினேகாவிற்கும் அவரது அக்காவிற்கும் இளையராஜாசாரின் பாடல்கள் பிடிக்குமென்பதால், அவர்களும் இளையராஜா சாரின் பாடல்களை கேட்க ஆரம்பித்தனர்.அந்த நாள் முதலே எங்களுக்குள் ஒருவித ஈர்ப்பு வந்துவிட்டது.
அந்த ஈர்ப்பிற்கும் எங்கள் காதலுக்கும் ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்தது இளையராஜா சார் பாடல்கள் தான். அந்த நாட்கள் இப்போதுநடந்தது போல் மிகவும் இனிமையாக உள்ளது.திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தற்போது சினேகா விடியல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படங்களை முடித்து கொடுக்க மூன்று மாதங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கபடுகிறது.” என்று கூறினார். அதாவது திருமணம் இன்னும் நான்கு மாதத்திற்குள் நடந்துவிடும் என்று சொல்லாமல் சொல்லுகிறாராம்.
காதலர் தின பரிசை பற்றி கேட்ட போது ஒரு சிறிய கைக்கடிகாரத்தை எடுத்து காண்பிக்கிறார் பிரசன்னா.
No comments
Post a Comment