Latest News

February 11, 2012

உயிரைக் காக்கும் மருந்துகளுக்கு நாடளாவிய ரீதியில் தட்டுப்பாடு
by admin - 0

நாடு முழுவதிலும் உள்ள பிரதான வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக அகில இலங்கை சுவசேவா சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.

கடந்த வருடத்திலும் இத்தகையதொரு நிலைமை காணப்பட்டதாக அகில இலங்கை சுவசேவா சங்கத்தின் தலைவர் காமினி குமார சிங்க சுட்டிக்காட்டினார்.

மருந்து வகைகளை உரிய முறையில் பகிர்ந்தளிக்காமையே இதற்கான காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் , சுகாதார அமைச்சின் வைத்திய விநியோகப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி கமல் ஜயசிங்கவை தொடர்பு கொண்டபோது .

நாடளாவிய ரீதியில் மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவுவதை ஏற்றுக் கொண்ட அவர், இதனை மிக விரைவில் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்
« PREV
NEXT »

No comments