Latest News

February 10, 2012

மாலைதீவுப் பொலிசாரிடம் வாங்கிக்கட்டிய ஜனாதிபதி
by admin - 0


மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகம்மத் நஷீட் அந்நாட்டுப் பொலிஸார் நடத்திய தாக்குதல் காரணமாகப் படுகாயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இவருடன் இவரது ஆதரவாளர்கள் பலரும் காயமுற்றுள்ளனர். முகம்மத் நஷீடின் ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்ட்ட எதிர்ப்புப் பேரணியின் போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதனை முகம்மத் நஷீடின் மாலைதீவு ஜனநாயகக் கட்சி இன்று அறிவித்துள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்ற பின்னர் தற்போது அவர் பாதுகாப்பாக தனது வாசஸ்தலத்துக்குத் திரும்பியுள்ளார் என்றும் அந்தக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாலைதீவை தனது இரும்புப் பிடியில் பலகாலம் வைத்திருந்த அப்துல் கயூமை வீழ்த்தி ஜனநாயக வழியில் ஆட்சியைப் பிடித்தவர் நஷீட் ஆகும். அவர் மாலைதீவில் பல திருத்தங்களைச் செய்து பெரும் செல்வாக்கு மிக்க ஜனாதிபதியாகத் திகழ்ந்தார் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. ஆனால் இன்று அவர் நிலையைப் பார்த்தால் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக சி.என்.என் தொலைக்காட்ச்சி தெரிவித்துள்ளது. அவரை ஒரு கைதியை இழுத்துச் செல்வதுபோல பொலிசார் தற தறவென்று கொண்டுசென்றுள்ளனர். எந்த ஜனாதிபதிக்கும் இந் நிலை வரலாம் என்பதனை அனைவரும் உணர்ந்து செயல்படுவது நல்லது.
« PREV
NEXT »

No comments