இதில் புலிகள் இறுதிவரை களமாடி மக்களின் பாதுகாப்பு கருதி யுத்தத்தை மெளனிப்பதாக அறிவித்து யுத்தம் முள்ளிவாய்க்காலுடன் முடிவுக்கு வந்திருந்தது.
இறுதி யுத்தத்தின் இறுதி நாட்களில் புலிகளின் முக்கிய அணிகளை இலங்கை ராணுவத்தின் முற்றுகையிலிருந்து வெளியேற்றுவதற்கான திட்டங்களை புலிகளின் அதி உயர் தளபதிகள் வகுத்திருந்தனர்.
அதன் படி புலிகளின் அதி முக்கிய சிறப்பு படையணிகளையும் சிறப்பு பயிற்சிகள் பெற்றிருந்த போராளிகளையும்,தளபதிகளையும் கொண்ட அணி மூன்று விதமாக பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் மூன்று அணியையும் வெளியேற்றுவதற்கான ஊடறுப்பு தாக்குதலுக்கென்று சிறப்பு அணியொன்றும் தயார் படுத்தப்பட்டு அதில் கரும்புலிகளும் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.
போர் முள்ளியாக்காலின் நடு மையத்தை தொடுவதற்கு முன்னதாக புலிகளின் தலைவர் மேதகு.வே பிரபாகரன் உட்பட்ட சிறப்பு அதி உச்ச கடும் பயிற்சி பெற்ற போராளிகளையும் தளபதிகளையும் வெளியேற்றுவதற்கான கடும் போர் முள்ளிவாய்க்கால் மேகத்தில் சூழ்ந்து கொண்டது.
குறிப்பிட்ட மூன்று அணியையும் வெளியேற்றுவதற்கான கடும் சமர் ஆரம்பிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே ராணுவத்தினரும் புலிகளும் கடும் இழப்புக்களை எதிர் கொண்டிருந்தனர்.
ஆனால் கடும் இழப்புக்களுக்கும் மத்தியிலும் புலிகளின் கரும்புலி தாக்குதல் அணியின் பேராதரவுடன் மூன்று அணியையும் வெளியேற்றுவதற்கான புலிகளால் நடத்தப்பட்ட இறுதி தாக்குதல் புலிகளுக்கு சாதகமாக சில மணிநேரங்கள் இருந்துள்ளது,இதை பயன் படுத்தி தலைவர் பிரபாகரன் உட்பட்ட சில முக்கிய தளபதிகள் கொண்ட இரு அணியினர் ராணுவத்தின் முற்றுகையிலிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டிருந்தனர்.
ஆனால் இந்த இரு படையணிகளையும் வெளியேற்றிய பின் மூன்றாவதாக வெளியேறுவதற்காக இருந்த படையணி கூடிய ராணுவ பலத்துடன் வந்த ராணுவத்தினரின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வந்தது.அப்போது இரு தரப்பினருக்குமிடையில் வாழ்வா சாவா என்ற இறுதி போரே உச்சம் பெற்று நடைபெற்றது.
ஆனால் துரதிஷ்ட வசமாக புலிகளிடம் இருந்த ஆயுதங்கள் அங்கு குறைய ஆரம்பித்தவுடன் வெளியேறுவதற்காக போரிட்ட மூன்றாவது சிறப்பு அணி ராணுவத்தினரின் தாக்குதல்களுக்கு உள்ளாகி வீரச்சாவை தழுவியிருந்தனர்.
இந்த ஊடறுப்பு சமரிலேயே பிரிகேடியர் சொர்ணம்,கேணல் கஜன்,திருமலைமாவட்ட அரசியல் பிரிவுத்தலைவர் திலக்,ராதா வான்காப்பு படையணி லேப் கேணல் ஜெகன்,கிட்டு பிராங்கிப்படையணி அன்பு,மாலதி படையணியை சேர்ந்த மகளிர் போராளி அஜந்தி,புதியவன் மாஸ்ரர் ,தளபதி லெப் கேணல் கோகிலன்,தளபதி குட்டிமணி,உட்பட்ட சிறப்பு பயிற்சி பெற்ற போராளிகளும் அந்த சமரில் வீரச்சாவடைந்திருந்தனர்.
இதேவேளை அதே சமரில் போரிட்டு உயிர் தப்பி எதிரியின் முற்றுகையை உடைத்து வெளியேற முடியாமல் போன சில தளபதிகள் மக்களோடு மக்களாக ராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தனர்.இதில் ஒருவர் கேணல் ரமேஸ்.சண்டை முடிவடைந்ததும் வேறு வழியின்றி சாதாரண மக்களோடு மக்களாக ராணுவ கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளனர்.அதில் பலர் அங்கு ராணுவத்தினருடன் சேர்ந்து இருந்த துரோக கூட்டங்களால் காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment