ஆனையிறவு உப்பளத்தில் முன்னர் வருடாந்தம் 50,000 70,000 மெற்றிக்தொன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டது. இது நாட்டின் உப்புத் தேவையில் 35 சதவீதத்தைப் பூர்த்தி செய்தது. எனினும் 1980களில் இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இந்த உப்பளத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில், அரச மற்றும் தனியார்துறை கூட்டுமுயற்சிகள் மூலம் இந்த உப்பளத்தில் உப்பு உற்பத்தி நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக பாரம்பரிய மற்றும் சிறுகைதொழில் அபிவிருத்தி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்தார்.
உப்பு உற்பத்திக்காக இப்பகுதி காணியை குத்தகைக்கு விடுவதற்கான சாத்தியத்தை அரசாங்கம் ஆராயும் என அவர் கூறினார். எனினும் இது தொடர்பாக இறுதித் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனவும்அவர் தெரிவித்தார்.
சுமார் 1000 ஏக்கர் பரப்பளவுள்ள இக்காணியில் நிலக்கண்ணிகளை அகற்றும் நடவடிக்கை பூர்த்தியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments
Post a Comment