ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அழகு பதுமையாக, கேரள வரவாக வந்தவர் டயானா மரியம் குரியம். படத்திற்காக நயன்தாரா என்று பெயர் மாற்றி ரசிகர்களிடம், ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன் என்று பாடி பரவசப்படுத்தினார். தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்த நயன்தாராவுக்கு சொந்த வாழ்க்கை சோகமாகி கொண்டிருக்கிறது. நட்சத்திரமாய் ஜொலிக்க வந்தவர் நட்சத்திர காதலால் நசுங்கிவிட்டார் என்றே சொல்லலாம்.
சிம்புவுடன் காதல், பிரபுதேவாவுடன் காதல், நெருக்கம் என்று சர்ச்சையில் சிக்கிய நயன்தாராவுக்கு, கல்யாணம் ஆகமாலேயே சிறந்த தம்பதிகளாக பிரபுதேவா-நயன்தாரா தேர்ந்தெடுக்கப்பட்டது தான் ரொம்ப கொடுமை. காதல் கல்யாணம் பண்ணிய முதல் மனைவி ரமலத்தை, குழந்தைகளோடு தவிக்க விட்டு விவாகரத்து கேட்டது இன்னும் பெரிய கொடுமை. இருந்தாலும் காதல் ஒரு பக்கம், பிள்ளை பாசம் ஒரு பக்கம் என்று பிரபுதேவாவிற்கு நயன்தாரா கொடுத்த தண்டனை பெரிதுதான். இதிலிருந்து தப்பிக்கத்தான் ஓடி ஓளிந்து கொண்டு இருக்கிறார் பிரபுதேவா என்கிறது அவரது நெருங்கிய வட்டாரம்.
இதுஒருபுறம் இருக்க தெலுங்கில் நடித்த ஸ்ரீராம ராஜ்யம் படத்தோடு சினிமாவுக்கு முழுக்கு போட்டு, விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்திருந்தார் நயன்தாரா. பிரபுதேவா வெடி படம் முடித்த பிறகு கல்யாணம், சொந்த வீடு வாங்கிட்டு கல்யாணம், அப்புறம் இந்தி படம் முடித்து கல்யாணம் என்று கணக்கு போட்டவருக்கு, நிமிஷம் எல்லாம் வருஷமாகி வாட தொடங்கினார். மும்பை, புனே, சென்னை என்று பறந்த காதல் இப்போது ஆட்டம் கண்டு போய் உள்ளது. இதனால் நயன்தாரா, தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கு பணம் கட்ட வேண்டும், தன் செலவுகளை பார்க்க வேண்டும். காசு புரண்ட கையாச்சே என்ன செய்வது. அதுதான் மீண்டும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
சரி நயன்தாரா மீண்டும் நடிக்க வந்து விட்டார். அவரது பெற்றோர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டால் அங்கேயும் சொல்ல முடியாத சோகம் நிழலாடுகிறது. சொந்தம், பந்தம், பார்ட்டி, பிறப்பு, இறப்பு என்று எதிலும் கலந்து கொள்ள முடியாமல் குடும்பமே ஒதுக்கப்பட்டது போல் இருக்கிறதாம். பலரும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் வீட்டிலேயே அடைபட்டு கிடக்கிறார்களாம். பிரபுதேவாவுடன் பிரிவு, தெலுங்கு படங்களில் பிஸி என்று நயன்தாராவை பற்றி மீடியாக்களில் பரபரப்பாக வந்தாலும், நயன்தாராவுடன் இப்போது இருப்பது பிரபுதேவாவின் நண்பர் ராஜேஷ் தானாம். தனியார் வங்கியில் மேலாளராக இருக்கும் ராஜேஷ் தான் இப்போது நயன்தாராவின் கால்ஷீட்டை பார்த்து கொள்கிறாராம்.
பிரபுதேவாவை ஒதுக்கி வைத்தவர் இப்போது அவரது நண்பரை மட்டும் மேலாளராக வைக்க காரணம் என்ன...? என்ற கேள்வியை எழுப்புகிறது. மேலும் தெலுங்கில் நடிக்க இருக்கும் படத்திற்கு 1.5கோடி சம்பளம், அடுத்து தமிழில் அஜித்துடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் என்று நயன்தாராவை பற்றி பல தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது. நடக்கும் சம்பவங்களை எல்லாம் பார்க்கும் போது, உண்மையிலேயே பிரபுதேவாவை நயன்தாரா பிரிந்து விட்டாரா...? அல்லது மக்களை நம்ப வைக்க பிரபுதேவா-நயன்தாரா நடத்தும் நாடகமா...? என்ற குழப்பத்தில் இருக்கிறது கோடம்பாக்கம்.
100 டாலர் ஒருநாளைக்கு உழைக்கலாம் வாருங்கள் முயற்சி செய்து பாருங்கள்
No comments
Post a Comment