Latest News

February 02, 2012

அழிந்துப் போன பண்டைய தமிழரின் இசைக் கருவி
by admin - 0


தமிழர்களின் வழக்கொழிந்துப் போன பண்டைய இசைக் கருவிகளில் குட முழவமும் ஒன்றாகும். மிகப் பெரிய தமிழர் இசைக்கருவிகளில் ஒன்றான இது இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே எஞ்சியுள்ளது. திருவாரூர் தியாகராஜர் மற்றும் திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோவில்களில் மட்டுமே இப்போது குட முழவத்தைக் காண முடியும்.வார்ப்பு வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட உயரமானக் குடத்தில் ஐந்து வாய்கள் இருக்கும்.வாய்கள் அனைத்தும் மான் தோல்களால் மூடப்பட்டிருக்கும்.ஒவ்வொரு வாயிலிருந்து வெவ்வேறு விதமான பண்(இசை) எழுப்பப்படும்.குட முழவம் போலவே கேராளவிலும் பழமையான இசைக் கருவி பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் அதில் ஒரே ஒரு வாய் மட்டுமே இருக்கும்.அதை மலையாளத்தில் ''மிழவு'' என்றழைக்கின்றர்கள்.சங்க இலக்கியங்களில் குட முழவத்தைப் பற்றி பலப் பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன.மேலும் மறவர்களின் தோல்வலிமைக்கும், பலாப்பழத்திற்கும், பனை மரத்தின் அடிக்கும், இக்கருவியை ஒப்பிட்டும் பல சங்கப் பாடல் பாடப்பட்டுள்ளன
« PREV
NEXT »

No comments