Latest News

February 19, 2012

யாழில் மாணவி கடத்தப்பட்டார்
by admin - 0

தென்மராட்சி, கெற் பேலிப் பகுதியில் 16 வயதுப் பாடசாலை மாணவி ஒருவர் ஓட்டோவில் வந்த இனந் தெரியாதோரால் நேற்றுக் கடத்திச் செல்லப்பட்டார் என்று பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து தென் மராட்சியில் பதற்றம் நிலவியது.கச்சாய் பாடசாலை ஒன்றில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரே கடத்தப்பட்டார் என்று கூறப்படுகின்றது. நேற்றைய தினம் பாடசாலை யில் இடம்பெற்ற விளை யாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சமயம் கெற்பேலிப் பகுதியில் ஆள் நடமாட்டம் குறைந்த வீதியில் வைத்து ஓட்டோவில் வந்த கும்பல் ஒன்று இவரைக் கடத்திச் சென்றது என்று முறைப் பாட்டில் கூறப்பட்டுள்ளது.

தான் கடத்தப்பட்டது குறித்து அந்த மாணவி தனது தாய்க்குத் தொலைபேசியிலிருந்து குறுந்தகவல் அனுப்பி வைத்தார் என்றும் அவரது தாயார் கொடிகாமம் பொலிஸ் நிலையதில் செய்த முறைப்பாட்டில் கூறியுள்ளார். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
« PREV
NEXT »

No comments