Latest News

February 18, 2012

இன்டர்நெட்டில் 'பிட்' பட ரேஞ்சுக்கு பரவும் பில்லா 2 ஸ்டில்கள்!
by admin - 0

இணையதளங்களில் கடந்த சில தினங்களாகவே பில்லா-2 பட ஸ்டில்களைப் பார்க்க முடிகிறது.

ஆனால் இவை முறையாக வெளியானவை அல்ல. படத்தில் விபச்சார விடுதியில் நடக்கும் ஒரு காட்சியை அப்படியே லீக் செய்திருக்கிறார்கள் இணையத்தில்.

ஆணுக்கு பெண் வேடம் போட்டு படுக்கையில் கிடத்தி வைத்திருப்பது போல ஒரு காட்சி. படுகவர்ச்சியான ஒரு பெண்ணுடன் அஜீத் இருப்பது போன்ற காட்சி என கிட்டத்தட்ட பிட்டு பட ரேஞ்சுக்கு அந்தக் காட்சிகள் உள்ளன.

இதனைப் பார்த்து அஜீத் ரசிகர்கள் படு காட்டமாகிவிட்டனர். உண்மையிலேயே இவை பில்லா ஸ்டில்கள்தானா... இவை உண்மையென்றால் படம் எப்படியிருக்குமோ என பயமாக உள்ளதே என ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் அளவுக்கு நிலைமையை உருவாக்கிவிட்டன இந்த ஸ்டில்கள்.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி அதிர்ச்சியும் கவலையும் வெளியிட்டுள்ளார்.

இந்த ஸ்டில்களை நாங்கள் வெளியிடவே இல்லை. யாரோ இணையதளத்தில் லீக் செய்துள்ளனர். அவர்கள் மீது சட்டப் பூர்வ நடவடிக்கை மேற்கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.










« PREV
NEXT »

No comments