Latest News

February 14, 2012

வேலை நிறுத்தம் முடிவுற்றது - மக்கள் தலையில் 20 சதவீத பஸ் கட்டண சுமை
by admin - 0

இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு தொடக்கம் மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் போக்குவரத்து அமைச்சருக்கும் பஸ் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் இடையே இன்று மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.

இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதன்படி பஸ் கட்டணம் 20 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆகக்குறைந்த கட்டணமாக 9 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இன்று நள்ளிரவு தொடக்கம் அமுலுக்கு வருகிறது.
« PREV
NEXT »

No comments