Latest News

January 17, 2012

நிர்ணய விலைக்கு மேல் பொருட்களை விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை
by admin - 0

யாழ்ப்பாணத்தில் நிர்ணய விலைக்கு மேலதிகமாக பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக யாழ். நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

ஆகையால் நிர்ணய விலைக்கு அதிகமாக பொருட்களை விற்பனை செய்வதை அவதானித்து பொருட்களைக் கொள்வனவு செய்யுமாறு நுகர்வோருக்கு யாழ்.பாவனையாளர் அதிகார சபை அறிவித்துள்ளது.

அத்துடன், வர்த்தகர்களிடம் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது நுகர்வோர் விற்பனை விலைக்கு மேலதிகமாக ஒரு ரூபா பணத்தைக்கூட கொடுக்க வேண்டாம் எனவும் குறித்த விற்பனை விலைக்கு கூடுதலாக விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments