Latest News

January 17, 2012

தேர்தல் களத்திலும் கொலவெறி: காங்., திட்டம்!
by admin - 0

உலகையே கலக்கி கொண்டிருக்கும் கொலவெறி பாடலை, தேர்தல் பிரச்சாரத்திலும் பயன்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் முதல்படம் 3. இப்படம் வெளிவருவதற்கு முன்பே இப்படத்தில் உள்ள கொலவெறி பாடல் மாபெரும் ஹிட்டாகியுள்ளது. தமிழ்நாடு, இந்தியாவையும் தாண்டி உலகம் முழுக்க இப்பாடல் பிரபலமாகியுள்ளது. புதுமுகம் அனிருத் இசையமைப்பில் வெளிவந்த இப்பாடலை தனு‌ஷே எழுதி, பாடியுள்ளார். சிறுசு முதல் பெருசு வரை கவர்ந்த இப்பாடலை பலரும் ரீ-மேக் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் உத்திர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இன்னும் ஒரு சில வாரங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அந்தந்த மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. பலர் நடிகர், நடிகையரை வைத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சற்று வித்தியாசமாக உலகப்புகழ்பெற்ற கொலவெறி பாடலை உ.பி., தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தலாம் என்று கருதியுள்ளது. மேலும் இதுதொடர்பாக இந்த பாடலின் உரிமையைப் பெற நடிகர் தனுஷுடன் காங்கிரசார் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
« PREV
NEXT »

No comments