Latest News

January 17, 2012

10 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் மிகக் குறைந்தபட்ச வெப்பநிலை!
by admin - 0

சென்னையில் இரவு நேரங்களில் குளிர் வாட்டி எடுக்கிறது. திங்கட்கிழமையன்று இரவு குறைந்தபட்ச வெப்பநிலையாக 16.9 செல்சியஸ் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கத்திரி வெயில் காலமான மேஜ-ஜூன் மாதங்களில் சென்னை நகரில் வெயில் வாட்டி வதைக்கும். தற்போது அதற்கு நேர்மாறாக இரவில் கடும் குளிர் காற்று மக்களை முடக்கிப் போட்டுள்ளது.

பொதுவாக ஆண்டுதோறும் சென்னையில் புத்தாண்டு முதல் குளிர்காலம் தொடங்கும். இதேபோல இந்த ஆண்டும் இப்போது நகரில் மாலை 3 மணிக்குப் பின்னர் குளிர் காற்றுடன் கூடிய காலநிலை நிலவுகிறது. சென்னை நகரம் மட்டுமல்லாது புறநகர் பகுதிகளிலும் அதிகாலையில், பனிமூட்டமும் காணப்படுகிறது.

திங்கட்கிழமை இரவு குறைந்தபட்சமாக 16.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையாக பதிவாகியுள்ளது. இது கடந்த பத்து ஆண்டுகளில் இது தான் மிகக் குறைந்தபட்ச வெப்பநிலையாகும்.

20 ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்த அளவுக்குக் குறைவான வெப்பநிலை பதிவானது. இதையடுத்து இப்போது தான் இந்தளவுக்கு வெப்பநிலை குறைவாகியுள்ளது.

சென்னையில் பதிவான மிகக் குறைந்தபட்ச வெப்ப நிலை தெரியுமா?. 13.9 டிகிர் செல்சியஸ். இது நடந்தது 1895ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி.
« PREV
NEXT »

No comments