Latest News

January 16, 2012

சபரிமலைக்கு சென்ற தமிழக பக்தர் மீது கேரளாவில் சுடுநீர் ஊற்றி வெறிச்செயல் - சிகிச்சை பலனளிக்காது பலி!
by admin - 0

சபரிமலை சென்ற ஜய்யப்ப பக்தரான தமிழர் ஒருவர் மீது மலையாளிகள் சுடுநீரை ஊற்றி வெறிச்செயல் புரிந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட தமிழர் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளதாக அறிய முடிகின்றது.

இது தொடர்பாக அறிகையில்... தமிழகத்தில் இருந்து நண்பர்களுடன் சபரிமலை சென்ற இவர் நண்பர்களை பிரிந்து தவித்துள்ளார். பம்பை பகுதியில் ஒரு தேநீர் கடையில் தேநீர் அருந்துவதற்காக சென்றிருந்த வேளை தமிழரென அடையாளம் தெரிந்த உடன் அவர்மீது அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சுடுநீரை ஊற்றி வெறிச்செயல் புரிந்துள்ளனர்.இந்த செய்தியை உறுதிப்புடுத்த சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்ட போது இந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தனது நண்பர்கள் குழுவில் இருந்து பிரிந்த சாந்தவேல் என்பவரே கொலைவெறி கொண்ட மலையாளிகளால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.

திருவெற்றியூரைச் சேர்ந்த சாந்தவேல் என்பவர்மீது பம்பை பகுதியில் உள்ள தேநீர் கடையில் உள்ள கொலைவெறிபிடித்த மலையாளிகள் கொதிக்க கொதிக்க சுடுநீரை பின்பக்கமாக ஊற்றியுள்ளனர். பின்பக்கம் முழுவதுமாக வெந்து துடித்த சாந்தவேலை கோட்டயம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் அதன்பின்னர் சென்னையில் உள்ள கே.எம்.சி. மருத்துவமனைக்கு எடுத்துவந்து மேலதிக சிகிச்சை கொடுத்த போதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

சில தினங்களாக முல்லைப்பெரியாறு பிரச்சினை அமைதியாக இருந்துவரும் நிலையில் இந்த படுகொலை நடந்துள்ளதால் மிகவும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.



« PREV
NEXT »

No comments