இவர் கடந்த 2004ஆம் ஆண்டு எம்.சி.பி. எனப்படும் மைக்ரோசொப்ட் சான்று விருதினை தனது 9 வயதில் பெற்று சாதனை படைத்தார்.
இவரது திறமையினைப் பாராட்டி அந்நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் , இந்த விருதை இவருக்கு வழங்கி கெளரவித்தார்.
இதன் மூலம் உலகில் தொழில்ரீதியான முறையில் மைக்ரோசொப்ட் விருதினை தனது 9ஆவது வயதில் பெற்ற முதல் இளவயது சிறுமி என்ற பெயர் பெற்றார்.
இராணுவ வீரரின் மகளான அர்ஃபா கரீம் ராந்தவாவுக்கு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. லாகூர் இராணுவ மருத்துவமனையி்ல் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் 29ஆம் திகதியன்று தீவிர சிகிச்சைப்பிரிவில் அவரை சேர்த்தனர். அங்கு அவரது மூளை மற்றும் இதயத்தின் செயல்பாடுகள் குறை யத் தொடங்கவே, சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமையன்று உயிரிழந்தார்.
No comments
Post a Comment