இந்நிலையில் இது பற்றி சினேகா, ’’பொங்கல் எனக்கு நல்ல ஆரம்பமாக அமைந்திருக்கிறது. இந்த ஆண்டு ஜூன் மாத மத்தியில் எனது திருமணம் நடக்கும். சென்னையில் இதை பெரிய விழாவாக கொண்டாட உள்ளோம்.
பிரசன்னாவும் நானும் இது பற்றி எதையும் பேசிக்கொள்ளவில்லை.
இருவரும் சேர்ந்து வாழ்ந்தால் மகிழ்ச்சியான வாழ்வாக அமையும் என்று உணர்ந்திருக்கிறோம்.
என் வாழ்வில் பிரசன்னா இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறேன். அதேபோல் அவரும் விரும்புகிறார். மற்ற யாரையும்விட பிரசன்னா என்னை நன்கு புரிந்துகொண்டிருக்கிறார்.
திருமண தேதி முடிவு செய்வது பற்றி இருவரும் ஆலோசித்து வருகிறோம். திருமண வேலைகள், சினிமாவில் நடிப்பது என இரண்டையும் எந்த குழப்பமும் இன்றி பார்த்துக்கொள்கிறேன்’’ என்று கூறினார்.
1 comment
உங்களுக்கு திருமணம் ஆனால் என்ன /ஆகாவிட்டால் என்ன? இதனால் சமுதாயத்திற்கு என்ன நன்மை
Post a Comment