Latest News

January 21, 2012

லதா ரஜினிகாந்தின் பேச்சு, ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
by admin - 0





என் கணவரை அரசியலுக்கு வா வா என்று அழைக்கிறார்கள்: அவர் வர மாட்டார்: லதா ரஜினிகாந்த்








ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைக்காதீர்கள். அவர் வர மாட்டார் என லதா ரஜினிகாந்த் சென்னையில் (19.01.2012) நடந்த ஆஸ்ரம் கல்வி நிறுவன விழாவில் பேசினார். இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடந்தது.

விழாவை தொகுத்து வழங்கிய லதா ரஜினிகாந்த பேசும்போது,


என் கணவர் இந்திய அளவில் மிகச் சிறந்த தேசியவாதி. அவரை பலரும் அரசியலுக்கு வா வா என்று அழைக்கிறார்கள். அரசியலுக்கு வந்துதான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதில்லை. அதில் இல்லாமலும் சேவை செய்யலாம். எனவே தயவு செய்து அவரை இனிமேல் அரசியலுக்கு வரவேண்டும் என்று அழைக்காதீர்கள். அவர் வர மாட்டார்.


நான் இப்போது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்திய அளவில் ஒரு புது அமைப்பை தொடங்கியிருக்கிறேன். அதன் மூலம் மக்களுக்கு நிறைய பொதுச்சேவைகள் செய்ய திட்டமிட்டிருக்கிறேன். சில சமூக அமைப்புகளுடன் இணைந்து செயல்படவும் திட்டம் வகுத்துள்ளேன் என்றார்.


விழாவில் லதா ரஜினிகாந்தின் பேச்சு, ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
« PREV
NEXT »

No comments