விருது பெற்றவர்களை பாராட்டி ரஜினிகாந்த் பேசுகையில்,
என் மனைவி லதா நடத்தும் ஆஸ்ரம் பள்ளி நிகழ்ச்சிகள் எல்லாமே நல்லா இருக்கும். இங்கே மறைந்த நடிகர் ஷம்மி கபூர், ஆஷா, என் குருநாதர் கே.பாலசந்தர் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாயிருந்தது. அதே வேளையில் எனக்கு மிகவும் நெருடலாகவும் இருந்தது.
நான் என்ன சாதிச்சுட்டேன்: என் பெயரில் எதுக்கு விருது. ஜாம்பாவான்கள் ஷம்மி கபூர், என் குரு பாலசந்தர் ஆகியோருக்கு என் பெயரில் விருதுகள் வழங்கப்படும்போது, நான் உண்மையிலேயே வருத்தப்பட்டேன். நாம் என்ன சாதிச்சிட்டோம். எதுக்கு நம் பெயரில் விருதுகள் வழங்க வேண்டும். அந்தளவுக்கு நான் தகுதி வாய்ந்தவன் என நினைக்கவில்லை.
எனவே விழா நடத்தும் என் மனைவிக்கு சொல்லிக்கொள்கிறேன். அடுத்த முறை விருதுகள் வழங்கும்போது என் பெயரில் வேண்டாம். தாதா சாகேப் பால்கே விருது பெற்ற என் குருநாதர் பாலசந்தர் பெயரில் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
No comments
Post a Comment