Latest News

January 10, 2012

யாரும் தாக்கவில்லை: ஆனால் புலி ஆதரவாளர்கள் இடைமறித்தனர்
by admin - 0

இராமேஸ்வத்தில் வைத்து தாக்கியதாக கூறப்படும் சம்பவம் உண்மைக்குப் புறம்பானது என பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ்வின் கணவரான நடேசன் இணையத்திற்கு தெரிவித்தார்.

விசேட யாகம் ஒன்றினை செய்வதற்காக இந்தியாவிற்கு சென்றுள்ள திருக்குமாரன் நடேசனை தமிழ் அமைப்புக்களை சேர்ந்தவர்கள் தாக்கியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

என்னை யாரும் தாக்கவில்லை எனினும் பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு விடுதலைப் புலி ஆதரவாளர்கள் சிலர் தடையாக இருந்தனர் என அவர் தெரிவித்தார்.

வழிபாட்டிற்காக சென்ற என்னை இடைமறித்து, சுற்றிவளைத்து பல கோஷங்களை எழுப்பினர் எனவும் ரி. நடேசன் தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments